Monday, October 29, 2012

கூகிள் ஆட்சென்ஸ் இல்லையா கவலையை விடுங்க..சம்பாதிக்க இதோ வழி

வணக்கம் நண்பர்களே.பொதுவாக பதிவர்கள் ஒவ்வொருவரும் ஆசைப்படும் ஒரு விடயம் தம் பதிவுகள் மூலம் ஒரு சிறு தொகை பணத்தை பெற வேண்டும் என்று. இதற்க்கு பொதுவாக Google Adsense ஜ தான் விரும்புவார்கள் ஆனால் ஆட்சென்ஸ் தமிழ் மொழியில் பதிவுகள் காணப்பட்டால் வழங்கப்படாது அதையும் மீறி அதிஷ்டம் அடித்து கிடைத்து விட்டாலும் ஏதோ காரணங்களால் அதையும் முடக்கி விடுவார்கள்.ஆகமொத்தம் கூகிள் ஆட்சென்ஸ் என்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.ஆனால் ஒன்லைனில் பணம் ஈட்டி தரும் விளம்பர சேவைகளின் கூகிள் ஆட்சென்ஸ்க்கு நிகர் எதுகும் இல்லை ஆனால் அதை மட்டும் நம்பியிருக்காமல் பணம் ஈட்டகூடிய வேறு சில தளங்களும் உள்ளன இவை கூகிள் ஆட்சென்ஸ் அளவுக்கு பணம் ஈட்டி தராவிட்டாலும் ஒரளவு பணம் ஈட்டக்கூடியவை அந்த வகையில் என் அனுபவத்தை வைத்து நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் தளம் Adstract  இதுகும் ஆட்சென்ஸ் போன்று அழகான விளம்பரங்களை காட்சிபடுத்துகின்றது அதனலால் வாசகர்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும் சந்தர்ப்பம் கூடுதலாக காணப்படுகிறது.இவர்கள் மொழியினை முதன்மைப்படுத்தவில்லை.

நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்

முதலில் http://www.adstract.com/ இவ் முகவரிக்கு செல்லுங்கள்.பின்னர் அப்பக்கத்தில் Get Started என்று ஒரு பட்டன் காணப்படும் அதை அழுத்துவதன் மூலம் உங்கள் தகவல்களை கொடுத்து பதிவு செய்யுங்கள்.

பின்னர் உங்கள் கணக்கு ஒரு 1-3 நாட்க்கள் வரை ஆராயப்பட்டு .ஏற்றுக்கொள்ளப்பட்டதா..அல்லது நிராகரிக்கப்ப்டத்தா என்பதுடம்.ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்கள் கணக்கிற்கான Passwordம் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பின்னர் நீங்கள் உங்கள் கணக்கிற்க்கு உள் நுழையக்கூடியதா இருக்கும்.



இனி எவ்வாறு விளம்பரங்களை உருவாக்குவது என்று பார்ப்போம் நீங்கள் ‘Tag Generator' ஒன்றை காணக்கூடியதாக இருக்கும்.அதனை கிளிக் செய்யுங்கள் பின்னர்

அதில் ‘Smart Tag' என்பதை தெரிவு செய்து விட்டு உங்களுக்கு விருப்பமான அளவை தெரிவு செய்யுங்கள் உட்னே கீழே விளம்பரத்துக்கான Script உருவாக்கப்படும் அதனை கொப்பி செய்து எங்கள் தளத்தில HTML/Java Script ஒன்றை சேர்த்து அதில் பேஸ்ட் செய்து Save செய்யுங்கள் அவ்வளவு தான் உங்கள் தளத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும்.


இதன் வருமானம் தளங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் பொறுத்து தான் அமையும் .


இதில் மேலும் பல வகையான விளம்பரங்களும் உள்ளன அவை பற்றியும், பணத்தை பெறும் வழிமுறைகள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகிறேன்.

1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete