Monday, October 29, 2012

கூகிள் ஆட்சென்ஸ் இல்லையா கவலையை விடுங்க..சம்பாதிக்க இதோ வழி

வணக்கம் நண்பர்களே.பொதுவாக பதிவர்கள் ஒவ்வொருவரும் ஆசைப்படும் ஒரு விடயம் தம் பதிவுகள் மூலம் ஒரு சிறு தொகை பணத்தை பெற வேண்டும் என்று. இதற்க்கு பொதுவாக Google Adsense ஜ தான் விரும்புவார்கள் ஆனால் ஆட்சென்ஸ் தமிழ் மொழியில் பதிவுகள் காணப்பட்டால் வழங்கப்படாது அதையும் மீறி அதிஷ்டம் அடித்து கிடைத்து விட்டாலும் ஏதோ காரணங்களால் அதையும் முடக்கி விடுவார்கள்.ஆகமொத்தம் கூகிள் ஆட்சென்ஸ் என்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.ஆனால் ஒன்லைனில் பணம் ஈட்டி தரும் விளம்பர சேவைகளின் கூகிள் ஆட்சென்ஸ்க்கு நிகர் எதுகும் இல்லை ஆனால் அதை மட்டும் நம்பியிருக்காமல் பணம் ஈட்டகூடிய வேறு சில தளங்களும் உள்ளன இவை கூகிள் ஆட்சென்ஸ் அளவுக்கு பணம் ஈட்டி தராவிட்டாலும் ஒரளவு பணம் ஈட்டக்கூடியவை அந்த வகையில் என் அனுபவத்தை வைத்து நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் தளம் Adstract  இதுகும் ஆட்சென்ஸ் போன்று அழகான விளம்பரங்களை காட்சிபடுத்துகின்றது அதனலால் வாசகர்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும் சந்தர்ப்பம் கூடுதலாக காணப்படுகிறது.இவர்கள் மொழியினை முதன்மைப்படுத்தவில்லை.

நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்

முதலில் http://www.adstract.com/ இவ் முகவரிக்கு செல்லுங்கள்.பின்னர் அப்பக்கத்தில் Get Started என்று ஒரு பட்டன் காணப்படும் அதை அழுத்துவதன் மூலம் உங்கள் தகவல்களை கொடுத்து பதிவு செய்யுங்கள்.

பின்னர் உங்கள் கணக்கு ஒரு 1-3 நாட்க்கள் வரை ஆராயப்பட்டு .ஏற்றுக்கொள்ளப்பட்டதா..அல்லது நிராகரிக்கப்ப்டத்தா என்பதுடம்.ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்கள் கணக்கிற்கான Passwordம் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பின்னர் நீங்கள் உங்கள் கணக்கிற்க்கு உள் நுழையக்கூடியதா இருக்கும்.



இனி எவ்வாறு விளம்பரங்களை உருவாக்குவது என்று பார்ப்போம் நீங்கள் ‘Tag Generator' ஒன்றை காணக்கூடியதாக இருக்கும்.அதனை கிளிக் செய்யுங்கள் பின்னர்

அதில் ‘Smart Tag' என்பதை தெரிவு செய்து விட்டு உங்களுக்கு விருப்பமான அளவை தெரிவு செய்யுங்கள் உட்னே கீழே விளம்பரத்துக்கான Script உருவாக்கப்படும் அதனை கொப்பி செய்து எங்கள் தளத்தில HTML/Java Script ஒன்றை சேர்த்து அதில் பேஸ்ட் செய்து Save செய்யுங்கள் அவ்வளவு தான் உங்கள் தளத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும்.


இதன் வருமானம் தளங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் பொறுத்து தான் அமையும் .


இதில் மேலும் பல வகையான விளம்பரங்களும் உள்ளன அவை பற்றியும், பணத்தை பெறும் வழிமுறைகள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகிறேன்.

Sunday, October 28, 2012

Google Chromeஜ பயன்படுத்தி ஒருவர் கணணியை கட்டுப்படுதுவது எப்படி

இன்று Google Chrome ஜ பயன்படுத்தி எவ்வாறு இன்னொருவர்  கணணியை கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம். Google Chrome உலகின் சிறந்த உலாவி என்பது எல்லோரும் அறிந்த ஒன்று பல பல வசதிகள் அதில் காணப்படுகிறது. அதில் ஒன்று தான் இந்த வசதி. இச்சேவையை முற்று முழுதாக நம்பக்கூடியதாக இருக்கிறது காரணம் இதனை வழங்குவது Google. சரி இதனை எவ்வாறு நாம் உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம்

இதுகும் கிட்டதட்ட Teamviewer போன்ற ஒன்றே ஆனால் இதனை நான் உங்களுக்கு பரிந்துரைக்க காரணம் இதனை நாம் வழமையாக இணையத்தில் உலா வர பயன்படுத்தும் Google Chrome உலாவியில் இருந்தோ பயன்படுத்தலாம் அதவாது இதற்க்கென்று தனியான ஒரு மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை ஒரு Google Extension மூலம் பாவித்து கொள்ளலாம்.

முதலில் Chrome Remote Desktop BETAஇதனை கிளிக் செய்து உங்கள் Google Chrome இல் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனை திறந்து அதில் காணப்படும் Share என்பதை அழுத்துங்கள்.அப்பொழுது ஒரு 12 இலக்கம் உங்களுக்கு காண்ப்பிக்கப்படும்



அதனை நீங்கள் Copy செய்து நீங்கள் உங்கள் கணணியை வெளியில் இருந்து இயக்க நினைக்கும் நபருக்கு கொடுங்கள்

முக்கியமான விடயம் என்னவெனில் மற்றப்பகுதியில் இருப்பவரும் இவ Extension ஜ நிறுவி இருக்க வேண்டும்.

அவர் தனது கணணியில் இருந்து உங்கள் கணணியை இயக்க Access என்பதனை அழுத்த வேண்டும். அப்பொழுது ஒரு திரையில் 12 இலக்கம் கொண்ட ரகசிய இலக்கத்தை பதிவு செய்யும் படி கேட்க்கப்படும்



அப்பொழுது நீங்கள் குடுத்த 12 இலக்கத்தை அதில் இட்டு Connect ஜ அழுத்தினால் போதும்.உங்கள் கணணியை வேறு இரு கண்ணியில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.

Windows 8 ஜ உங்கள் கணணியில் இலவசமாக நிறுவ


கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி உலகம் முழுவதும் Windows 8 வெளியானது.அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் இது வெளியானா காரணத்தால் இதனை மக்கள் பயன்படுத்தி பார்ப்பத்தில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.ஆகவே Windows 8 ஜ எப்படி நீங்கள் உங்கள் கணணியில் இலவசமாக நிறுவது என்று பார்ப்போம். அதற்க்கு முதலில் உங்கள் கணணி கீழ்க்கண்ட அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

1. Processor Speed- குறைந்தது 1 GHz ஆக இருக்க வேண்டும்.
2. RAM – 32-bit பதிப்பிற்கு 1GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 2GB ஆகவும் காணப்படுதல் வேண்டும்.
3. Hard Disk – 32-bit பதிப்பிற்கு 16GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 20GB ஆகவும் இருத்தல் அசியமாகும்.
4. WDDM driver உடன் கூடிய Microsoft DirectX 9 கிராபிக்ஸ் சாதனத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
குறித்த அம்சங்கள் காணப்பட்டால் நீங்கள் Windows 8 ஜ நிறுவிக்கொள்ளலாம்.நீங்கள் செய்யவேண்டியவை இவை தான்
  • இந்த இணைப்புக்கு செல்லுங்கள் Microsoft official webpage (Windows8 for free)
  • அந்த பக்கத்தின் கீழ்ப்பககுதியில் நீங்கள் 32-bit அல்லது 64-bit பதிப்பை தெரிவு செய்யுங்கள்
  • உங்களுக்கு Windows Live கணக்கு இருக்க வேண்டியது அவசியம் இல்லையென்றால் உருவாக்கிக்கொள்ளுங்கள்
  • பின்னர் உங்கள் பற்றிய சில விடயங்களை பதிவு செய்யுங்கள் அவ்வளவு தான் 
  • Windows 8 ISO வடிவில் Download ஆகும்

அதனை ஒரு CD/USB யில்  Bootable ஆக்கி வழமையான Windows Install செய்யும் முறையில் Install பண்ணுங்கள்


குறிப்பு:- இந்த பதிப்பு 90 நாட்க்கள் மாத்திரமே செல்லு படியாகும்