Saturday, November 3, 2012

G-Mail ஜ பயன்படுத்தி இலவசமா SMS அனுப்புவது எப்படி???

வணக்கம் நண்பர்களே.... மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கிறேன் உங்களை.இந்த முறை உங்கள் G-Mail கணக்கை பயன்படுத்தி எவ்வாறு இலவசமாக உலகம் முழுவதும் இலவசமாக SMS அனுப்புவது என்று.இன்றைய காலத்தில் SMS என்பது முக்கியமான விடயம் எனவே அதை எவ்வாறு இலவசமாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
G-Mail ஜ பயன்படுத்தி இலவசாம அனுப்புவதை பற்றி இப்போது பார்ப்போம்.
முதலில் நீங்கள் இந்த முகவரியில் சென்று நீங்கள் அனுப்ப போகும் நாட்டில் எந்த எந்த தொலைத்தொடர்பு வழங்குனர்கள் இச்சேவையை வழங்குகின்றன என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்
குறிப்பு:- இந்திய சேவை வழங்குனர்கள் அனைவரும் இச்சேவையை வழங்குகிறார்கள்
சரி இனி என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் Gmail கணக்கிற்க்கு செல்லுங்கள்.பின்னர் உங்கள் கணக்கில் Setting பகுதிக்கு செல்லுங்கள். அங்கு கீழ் உள்ளவாறு காணப்படும்
பின்னர் அதில் Labs என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு சென்றது முதலாவதாக படத்தில் காட்டப்பட்டவாறு SMS பகுதியில் Enable என்பதை தெரிவுசெய்யுங்கள்

அடுத்து உங்கள் Gmail இல் வழமையாக Chat செய்யும் பகுதிக்கு செல்லுங்கள். அது Gmail பகுதியின் இடது கீழ்மூலையில் காணப்படும்

அதில் ‘Search,Chat or SMS' என்ற பகுதியில் நீங்கள் SMS அனுப்ப வேண்டியவரது தொலைபேசி இலக்கத்தை இடுங்கள்

இட்ட பின்னர் மேல் காணப்படும் படத்தினை போன்ற Window காட்டப்படும் அதில் காணப்படும் Send SMS ஜ அழுத்துங்கள்.

பின்னர் இவ்வாறான ஒரு Window உருவாகும் இதில் குறிப்பிட்ட நபரின் பெயரை குடுத்து Save செய்யுங்கள்.
அடுத்தாக நீங்கள் கொடுத்த பெயருடன் Chat Box உருவாகும் அதில் நீங்கள் அனுப்ப வேண்டிய SMS ஜ ரைப் செய்து Enter செய்தால் சரி SMS குறித்த நபருக்கு அனுப்பபட்டுவிடும்.


குறிப்பு:-உங்களுக்கு SMS Credit என்று 50  Credit வழங்கப்படும் நீங்கங் அனுப்பும் ஒவ்வொரு SMS ற்க்கும் 1  Credit படி கழிக்கப்படும். நீங்கள் SMS அனுப்பிய நபர் உங்களுக்கு Reply பன்னும் பட்சத்தில் 5  Credit கூட்டப்படும்.ஆனால் 50  Credit தான் ஆகக்கூடிய தொகை அதை விட Credit ஒரு போது கூடாது. சில சந்தர்பங்களில் Reply வராதவிடத்து உங்கள் தொகை குறைந்துவிட்டாலும் பிரச்சினையில்லை அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கணக்குக்கு 50 Credit வழங்கப்பட்டுவிடும்.எனவே இது முற்று முழுதான இலவச சேவை என்பதில் சந்தேகம் இல்லை..



No comments:

Post a Comment