Sunday, October 28, 2012

Google Chromeஜ பயன்படுத்தி ஒருவர் கணணியை கட்டுப்படுதுவது எப்படி

இன்று Google Chrome ஜ பயன்படுத்தி எவ்வாறு இன்னொருவர்  கணணியை கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம். Google Chrome உலகின் சிறந்த உலாவி என்பது எல்லோரும் அறிந்த ஒன்று பல பல வசதிகள் அதில் காணப்படுகிறது. அதில் ஒன்று தான் இந்த வசதி. இச்சேவையை முற்று முழுதாக நம்பக்கூடியதாக இருக்கிறது காரணம் இதனை வழங்குவது Google. சரி இதனை எவ்வாறு நாம் உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம்

இதுகும் கிட்டதட்ட Teamviewer போன்ற ஒன்றே ஆனால் இதனை நான் உங்களுக்கு பரிந்துரைக்க காரணம் இதனை நாம் வழமையாக இணையத்தில் உலா வர பயன்படுத்தும் Google Chrome உலாவியில் இருந்தோ பயன்படுத்தலாம் அதவாது இதற்க்கென்று தனியான ஒரு மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை ஒரு Google Extension மூலம் பாவித்து கொள்ளலாம்.

முதலில் Chrome Remote Desktop BETAஇதனை கிளிக் செய்து உங்கள் Google Chrome இல் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனை திறந்து அதில் காணப்படும் Share என்பதை அழுத்துங்கள்.அப்பொழுது ஒரு 12 இலக்கம் உங்களுக்கு காண்ப்பிக்கப்படும்



அதனை நீங்கள் Copy செய்து நீங்கள் உங்கள் கணணியை வெளியில் இருந்து இயக்க நினைக்கும் நபருக்கு கொடுங்கள்

முக்கியமான விடயம் என்னவெனில் மற்றப்பகுதியில் இருப்பவரும் இவ Extension ஜ நிறுவி இருக்க வேண்டும்.

அவர் தனது கணணியில் இருந்து உங்கள் கணணியை இயக்க Access என்பதனை அழுத்த வேண்டும். அப்பொழுது ஒரு திரையில் 12 இலக்கம் கொண்ட ரகசிய இலக்கத்தை பதிவு செய்யும் படி கேட்க்கப்படும்



அப்பொழுது நீங்கள் குடுத்த 12 இலக்கத்தை அதில் இட்டு Connect ஜ அழுத்தினால் போதும்.உங்கள் கணணியை வேறு இரு கண்ணியில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment