Tuesday, November 27, 2012

வீட்டில் இருந்தபடி மாதம் 2000 டொலர் உழைக்க வேண்டுமா??


வணக்கம் நண்பர்களே.. நேரம் கிடைக்காத காரணத்தினால் பதிவுகள் எழுதுவதில் சிக்கல் இருந்து சில நண்பர்களின் வேண்டுகோளில் இதை எழுத வேண்டிய கட்டாயத்தாலும் இதை எழுதுகிறேன்..

இன்றைய இளைஞர்கள் பொதுவாக எவ்வாறு இலகுவாக சம்பாதிப்பது என்பதில் மும்மரமாக இருக்கிறார்கள் அதில் இலகுவழியாக அவர்கள் பார்ப்பது Online Earning அதான் வெட்டித்தனமா Facebook அரட்டை அடிக்கிற நேரம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை. Online Earning என்பது என் அனுபவத்தில் இலகுவானதில்லை அதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே Online சம்பாதிக்க முதல் அதை தீர விசாரித்து அறிந்து ஈடுபடுவது நல்லது காரணம் அவர்கள் கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் போடுவார்கள் அதை நம்பி நாங்களும் முயற்சி செய்து பணம் எங்கள் கணக்கில் சேர அதை நாங்க பெற முயலும் போது தான் நமக்கு நாமம் போடுவார்கள்.

இந்த தளங்கள் கூட உங்களுக்கு நாமம் போடலாம்

EarningSip.com 

அந்த வகையில் இப்போது பிரபலமாக சமூக வலைத்தளங்கள் குறிப்பாக Facebook இல் நண்பர்கள் இப்போது முயற்சி செய்யும் ஒரு Online Earning முறை \

ReferralTask.com 


இது ஒரு வகையில் ஏமாற்று வேலை தங்கள் தளத்துக்கான வாசகர்களை அதிகரிக்கவும்,உலக தர வரிசையில் முன்னுக்கும் வருவதுக்கும் தான் இதை பயன்படுத்துகிறார்கள். ஆக மொத்தம் இதை நான் ஒரு வருடத்துக்கு முதலே முயற்சி செய்து விட்டேன் இதில் பயன் இல்லை .இத்தளத்தின் Link ஜ நண்பர்களுடன் பகிர்ந்து அதை அவர்கள் Click செய்தால் எங்கள் கணக்கிற்க்கு ஒரு டாலர் 1$ வரவு வைக்கப்படும். இவ்வாறு 30$ உங்கள் கணக்கில் சேர்ந்து விட்டால் நீங்கள் பணத்தை மீளப்பெறலாம் என்றும் கூறுகிறார்கள்.


பணத்தை பெறுவதற்க்கு Western Union,Pay pal போன்ற சேவைகளையும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பல நண்பர்கள் இதனை உண்மையென கருதி நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. இதனால் எங்களுக்கு எந்த வித நன்மையோ இலாபமோ கிடைக்க போவதில்லை.

சரி இதனை ஒரு போலி சேவை என்பதை காட்டுவதற்க்கான சில சான்றுகள்

1) முதலாவதாக நீங்கள் உங்கள் கணக்கை ஆரம்பிக்கும் பக்கத்தில் மூன்று விடயங்களை கேட்டுள்ளார்கள் அவை
  1)User Name
  2)Password
  3)Payment Email


இங்கு தான் நாம் கவனிக்க வேண்டும் நீங்கள் ஏற்க்கனவே Online Earning ஜ வேறு தளங்களில் முயற்சி செய்திருந்தால் தெரியும் நீங்கள் கணக்கை பதிவு செய்யும் போது Email என்று கேட்ப்பார்கள் மற்றும் இறுதியில் தான் நீங்க Paypal சேவையை பயன் படுத்தி பணத்தை பெற விரும்பினால் மாத்திரம் Payment Email அதாவது உங்கள் PayPal கணக்கு Email ஜ பதிய வேண்டும்.இங்கே நேரடியாகவே Payment Email ஜ கேட்கிறார்கள். இதை கவனித்தால் முதலாவது ஏமாற்று வேலையை கண்டு கொள்ளலாம்.

2) நீங்கள் கணக்கை தொடங்கி விட்டீர்கள் சரி சில காரணங்களால் உங்கள் கடவு சொல்லை (Password) ஜ மறந்து விட்டால் அதை மீளப்பெறுவதற்க்கு Recover Lost Password என்ற ஒரு வசதி இருக்கும். இந்த தளத்தில் அத்தகைய ஒரு வசதியே இல்லை. கணக்கின் Password ஜ மறந்தால் என்ன செய்வது???? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.


3) உங்கள் கணக்கில் 30$ சேர்ந்து விட்டால் பணத்தை அனுப்ப வேண்டியது தானே?? ஆனால் இவர்கள் பணத்தை அனுப்ப முதல் ஒரு Survey ஜ முடிக்க வேண்டும் என்பார்கள் அங்கு இருக்கிறது அவர்கள் தந்திரம்.நீங்கள் நினைப்பது போல அந்த Survey ஒன்று இலவசம் இல்லை அதை நீங்கள் நிறைவேற்ற அவர்கள் சொல்லும் வழிகளில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். அதில் எங்கள் நாட்டுக்கு பொருத்தமானது கைத்தொலை பேசி மூலம் நிறைவேற்றுவது.அதை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் தொலைபேசியில் இருந்து சுமார் 30/- கட்டணமாக அறவிடப்படும். அதன் பின்னர் தான் உங்கள் கணக்கில் இருக்கும் பணம் அனுப்படும்.



இது தான் அவர்கள் நிபந்தனை இதை நம்பி நாங்கள் முயன்றால் எங்கள் 30/- அவர்களுக்கு போகுமே தவிர எங்களுக்கு ஒரு சதம் கூட அனுப்பி வைக்கமாட்டார்கள். இவ்வளவு காரணங்களையும் வைத்து இதை ஒரு போலி சேவை என்ற முடிவுக்கு வரலாம்.

இதை விட சில தளங்கள் இச்சேவையை பற்றி விமர்ச்சித்துள்ளார்கள் அதை விட scambook.com இஅதாவது இவ் இணையத்தளம் ஏமாற்றும் தளங்கள் பற்றி வாசகர்கள் தங்கள் கருத்தை பகிரும் வகையில் அமைத்துள்ளது.இது உலகப்புகழ் பெற்ற தளம் இது.இதில் பகிர்ந்துள்ள கருத்துக்களை ஒரு முறை வாசித்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

இதனைப்பாருங்கள் http://www.scambook.com/company/view/34879/ReferralTaskcom

மேலும் இச்சேவையின் பொய் முகத்தை காண வேண்டும் என்றால் referraltask.com scam என்று தேடிப்பாருங்கள் நீங்களே உண்மையை புரிந்து கொள்ளுவீர்கள்.

எனவே நண்பர்களே இவ்வாறன சேவைகளை நம்பி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். Online ல் உழைப்பதற்க்கு பல நியாமான தளங்கள் உள்ளன அவற்றை நன்கு அறிந்து பயன்படுத்துங்கள்.கை நிறைய உழைக்கலாம் இவ்வாறன சேவைகளை நம்பி ஏமாதீர்கள்

No comments:

Post a Comment